$BlogRSDUrl$>
............................. |
Straight Angle™
|
Tuesday, April 24, 2012Happy B'day OMBlog!
I don't know when was the new look and feel for Blogger introduced- but I am loving it. May be this is a good start to the 9th year of this Blog. May be its time to revive these mothballed pages and give it a new purpose. I know I had been irreverent to this blog for a long- blame it on lack of purpose and reason. Wishing this page its 9th b'day and hope.
Wednesday, May 12, 2010Morality of Babies?A fascinating and intriguing article in NewYork Times on Morality of Babies. Its a longish article that I am trying to read through completely, with all the other hell breaking loose around- I have completed only 4 pages so far out of the total of 7 pages. I have my own interpretation of the research and outcomes- but need to condense them and comprehend the article in its entirety before making a post on it. Will wait for when I finish the article! Labels: Interesting, NewYork Times Saturday, April 24, 2010Six Years!Thursday, April 01, 2010New Conversion Table0.20 centibeats =~ 0.50 times the velocity of an unladen swallow =~0.20 centons =~2.00 shakes of a lamb's tail =~ 3.21 hertz =~0.14 microfortnights =~0.66 times the velocity of an unladen swallow =~1.21 gigawatts =~ 5.48 hertz =~2.00 shakes of a lamb's tail =~6.57 hertz =~0.11 microfortnights =~11.90 parsecs =~0.02 femtogalactic years =~44.04 jiffies =~0.05 nanocenturies =~1.50e-15 epochs =~0.06 nanocenturies =~1.21 gigawatts =~0.40e+43 Planck =~warp 9.22 =~0.36 microweeks = early morning exuberance! Monday, March 29, 2010Days- PastDays move like the electric poles near the railway tracks. Sometimes, they move like the edges of the sleeper slab too- either single, hard to catch but too hard not to notice or hard to notice and even harder to catch. Mind goes numb at that speed and wraps itself around the safety of the past. Clearing the cobwebs, Scrubbing the hardened stain of oil, I wonder- is it this hard to get you off? Labels: Blabber, Infinitely Sober Thursday, January 21, 2010காலங்களும் காட்சிகளும்!!இன்று, கீதை கண்ணனுக்கு உணர்த்தியது: எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது காலங்கள் மாறும் பொழுது காட்சிகளும் மாறும்! Labels: Infinitely Sober, Tamil Sunday, December 27, 2009InsanitySunday, December 20, 2009என்னவென்று அழைப்பது?எத்துணை ஆண்டுகள் சிற்சில பொழுதுகளில் உன் நினைவுகள்? தணிக்கை உண்டா என்னிடம்? கணிக்கத் தான் ஆகுமா? முன்னிரவு பொழுதுகளில், தொலைக்காட்சி வெளிச்சத்தில் நகக்கண் நோக்கும் தருணங்களில், காலைக் குளியல் தண்ணீரின் முதல் ஸ்பரிசத்தில், உலர்ந்த துவட்டியின் மொருமொருப்பில், மதிய உணவின் கடைசிப் பருக்கையில், நொய்ந்த உடலின் சோம்பல் முறிவுகளில், நினைவுகளின் தாக்கங்கள் பல. நினைத்தவுடன் அழைக்கும் தொலைவில் இருந்தும் , அழைத்தால் மட்டுமே நினைக்கும் நாட்களும், நினைத்தும் அழைக்க மறந்த நாட்களும் இன்னும் பல. அழைத்த சில நாட்களில் பேசிய சில சொற்களின் கனம் தாளாமல் நம்மிருவரின் இடையில் எழுந்த கண மௌனம் யுகங்களாய் நகர்ந்த, நகர்த்தப்பட்ட காலங்களும், அவை மறந்து, மறக்கப்பட்டு பின் நாம் பேசிய கதைகளின் அதிர்வுகளும் காற்றில் இன்னும் இருக்குமோ? இருந்தாலும் அவற்றை பதம் பிரிக்கதான் முடியுமோ? எத்துணை இரவுகள் உன் மடியின் கதகதப்பில் உறங்கும் கனவுகள்? கனவில் கூட கனவாகவே இருந்த நினைப்புகள் அவை. "இவ்வளோ நாளுக்கப்பறமும் மடியில தூங்கும் ஆசையா?" என்று தலை கோதியவாறே நீ கேட்டது இன்றும் என் காதில்..."எனக்கு வேலை இருக்கு" என்று சலித்துக் கொண்டாலும் மடியில் சாயும் போது மறுத்ததில்லை என்றும் நீ- கனவிலும் கூட. உன் முகம் பார்க்க ஏங்கி நின்று, பின் ஏக்கம் மறந்து, முகமும், அதோடு ஏக்கமும் சேர்ந்து மறந்து போகாதோ என்று இன்னும் தவித்த நாட்களும் உண்டு. ஏக்கம் மறைந்தும் முகம் மறந்ததில்லை. நான் வாசிக்கும் புத்தகங்களின் பொருள் அறிய ஆர்வம் அதிகம் உனக்கு. சில பொழுது, பொருள் தெரியாமல் நான் அகராதி புரட்டும் போது கேலியாய் சிரிப்பாய். சிரிப்பினூடே பொருளையும் கேட்டுத் தெரிந்து கொள்வாய். சிரிப்பின் பொருளும், புத்தகத்தின் பொருளும் அறிந்த திருப்தியில் உறங்கும் என்னை நீ பார்ப்பாயா என்று எனக்கு தெரியாது- பார்ப்பது போல் கற்பனை செய்து கொள்வேன். அந்த கற்பனையும் இனிதாய்த் தான் இருக்கும். உண்ணும் போது பேச்சு துணைக்கு ஒருவர் வேண்டும் என்று, தொலைபேசியை தொல்லைபேசியாக்கும் போதும், தொல்லை பொறுத்து, பேசியதையே திரும்பவும் பேசுவாய்- பல முறை உண்ணும் உணவின் மெனு'வே பேச்சாயிருக்கும். விடுப்பு எடுத்து பார்க்க வருகிறேன் என்று பல முறை சொல்லி, பின்னர் அலுவல் என்று வராமற் போகும் பொழுதும், திட்டுவாய்- பதில் சொல்லத் தெரியாமல் வாய் மூடி மௌனித்திருக்கும் அக்கணத்தின் உணர்வுகளை என்னவென்று சொல்வது? இவை அனைத்திற்கும் இன்னும் பலவற்றிற்கும் உன்னை என்னவென்று அழைப்பது?- கீதை போல் பாதை காட்டும் உனக்கு நீயே வைத்த பெயர்- நான் என்றும் அழைக்கும் பெயர்- அம்மா! Labels: Bliss, Infinitely Sober, Tamil Thursday, November 19, 2009கல்கியும் கதையும்!சில தினங்களுக்கு முன், பழைய பள்ளிக்கூட சினேகிதியின் மறுஅறிமுகம் கிட்டியது. நீண்ட நாட்களுக்கு பிறகு, அதுவும் மின்னூட்டதின் வாயிலாக கிட்டிய அறிமுகம். இன்று அவள் கல்லூரியில்- படிப்பது முதுகலை மருத்துவப் பட்டம் ஆயினும், தமிழில் ஆர்வம் அதிகம். சிற்சில ஷேமலாபங்கலுக்குப் பிறகு, பேச்சு தமிழின் பக்கம் திரும்பியது. கல்கியின் "சிவகாமியின் சபதம்" பேசாமல் ஒரு தமிழ்ப் பேச்சா?- அதுகாறும் இல்லாத அவா...இணையத்தில் தேடியதில், "சிவகாமியின் சபதம்" முழுமையும் வலைப்பதிவாக- சென்னைநூலகம்.காம்'ல் கிட்டியதும், வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். நேற்று மட்டும் வாசித்ததில், முதல் பாகம்- பரஞ்சோதி யாத்திரை முடிந்தது. கல்கியின் படைப்பில், நல்லவர் யாவரும் எப்பொழுதும் நல்லவரே..சில பொழுது, நரசிம்ம பல்லவர் மீது மரியாதையும், சில பொழுது பிரமிப்பும், சில பொழுது அச்சமும் வரும்- வெறுப்பு என்றுமே வராது. ஆனால், அவரை தொடர்பு படுத்த முடியாது- நரசிம்மரோ, ஆயனரோ, சிவகாமியோ- அவர் அனைவரும்- கதாபாத்திரங்கள்- நிஜ வாழ்க்கையில் கைக்கொள்ள முடியாத கற்பனை படைப்புகள். தவறு செய்யாத, செய்ய இயலாத மகா புருஷர்கள்- நரசிங்கரைப் போல, அல்லது கொடுமதியாளர்கள்- புலிகேசி போல [ விக்கிபீடியாவிலோ, வேறு கதை- அங்கு, புலிகேசி மன்னன் ஒரு மாவீரன் - சிவகாமியின் சபதத்திலோ, அவன் ஒரு ஈவிரக்கமற்ற கொடுங்கோலன்]. நம் உணர்ச்சிகள் ஒரு பொருட்டே அல்ல. ஆசிரியர் ஒரு கதாபாத்திரத்தை எண்ணிய விதமே, அப்பாத்திரம் அமையும்- ஐயம்மற்ற பாத்திரப்படைப்பு. அவர்களில் சாமானியர் எவரும் இலர். சிவகாமியின் சபதம் படிக்கும் எவருக்கும் மகேந்திர பல்லவன் மேல் ஒரு காதல் வருவது இயற்கை. அன்றைய காஞ்சி மாநகரம் கதைகளில் வருவது போன்று மகோன்னதமாக இருந்திருக்குமா என்று அறியக் கூடியவர் எவரும் இலர். படைப்பாளியின் உரிமையென்றாலும், வரலாறுடன் கற்பனை கலக்கும் போது, எது கற்பனை எது நிஜம் என்று தெரியாமல் போய்விடுகிறது- சிவகாமி நிஜமா? ஆயனர் நிஜமா? சிவகாமி-மாமல்லன் காதல் நிஜமா? - நிஜமாய் இருக்கலாகாதா என்று சில பொழுது நெஞ்சம் மயங்கும். அது போன்ற சமயங்களில், ஆசிரியரின் வர்ணனைகள் நிஜத்தையும் நிழலையும் பிரித்துக் காட்டிவிடும்.வரலாற்றுத் தொடர்கள்- கல்கியோ, சாண்டில்யனோ- அவை அனைத்தும் தமிழின உணர்ச்சிகளை மையமிட்டே அமைந்தவை. மிகைப்படுத்தப்பட்ட செய்திகளும், கதாசிரியரின் கற்பனைகளும் கலந்த கலவையை பருகி வளர்ந்த தமிழர்களை என்ன செய்வது? இவை போதாதென்று, தமிழ்வெறி ஊட்டவென்றே ஒரு கூட்டம்- விஞ்ஞான விளக்கமின்றி புலவரின் புகழ்ச்சியும், கதைகளின் மிகுதியும் கையிற்கொண்டு தமிழ் வரலாறு படைக்க துடித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் இனி மெல்லச் சாகும்! Labels: Tamil Tuesday, November 17, 2009I - Revisited
That was a post that I made a couple of years ago- Years go by- Time flies- yet- nothing changes!!- Funny me! Labels: Blabber, Infinitely Sober Jus been visits Free Counter Get awesome blog templates like this one from BlogSkins.com © All that is written here are the Genuine Products of the Intellect of the author and are protected by the relevant copyright acts...If you wish to quote the highness you can do so at your own risk and at risk to the integrity of the author's cerebrum.
Disclaimer: All that is written in this blog are the personal opinions of the author and are in no way representative of the organisation that the author has worked for or is working for or would be working for in the future.
|